Friday, September 18, 2009

Suchitra Sen : dekhocho ki taakay

சுசித்ரா சென் - சிறந்த நடிகை. நீண்ட காட்சியில் இயக்குனர் இந்த வசனம் பேசும் போது உங்கள் கண்களில் இருந்து கண்ணீர் வர வேண்டும் என்று சொன்னால் அது போலவே குறிப்பாக அந்த வசனம் பேசும் போது கண்ணீரை வரவழைத்து விடுவாராம்.

ஆன்ந்தி என்ற இந்தி படத்தில் இவரின் நடிப்பை கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.

இவர் 12பி படத்தில் ஜோதிகாவின் அம்மாவாக நடித்த மூன்மூன்சென்னின் தாயாரும் தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியா சென்னின் பாட்டியுமாவார்.

Saturday, February 21, 2009

துஜ்ஸே நாராஜ் - அமானத் அலி - ஜி டிவி - ஆங்கில வரிகள

உன் மீது எனக்கு
ஒன்றும்
கோபமில்லை..!
வாழ்க்கையே..!
ரொம்ப ஆச்சர்யம் தான்..!

உனது கள்ளம் கபடமற்ற குழந்தைதனமான
கேள்விகள்
தவிப்பாய் (ஏக்கமாய் அல்லது ஒரு மாதிரி நெருடலாய்) இருக்கிறது

நான் நினைத்துகூட பார்த்தது இல்லை
இந்த உலகில் வாழ்வதற்கு..
இவ்வளவு வலிகளை
சந்தித்து தான் ஆக வேண்டுமென்று..!

(நான் நினைத்து கூட பார்த்தது இல்லை)
சிரித்து மகிழ்ந்ததற்கு,
சிரிப்பை மகிழ்ச்சியை
நான் கடனாக
திரும்பவும் கொடுத்து விட வேண்டுமென்று..!

- குல்சார் சாப் எழுதிய இந்த பாடலின் வரிகள் கண்களை குளமாக்கும்
திரை: மாசும் (கள்ளம் கபடமற்ற குழந்தைத்தனம்)
காட்சி நடிப்பு: நசிருதீன் ஷா
இந்த பதிவில் பாடியவர்: அமானத் அலி (பாகிஸ்தான்)


Monday, February 16, 2009